வெள்ளி, 19 ஜூலை, 2013

தேனிதழே !!!!!!!!




பாலோடு தேன் சேர்த்து பொழுதன்று வந்தாய் 
பாவையே உன் பூவிதழால் பழமொன்றும் தந்தாய் 
மலரோடு மணம் சேர்த்து மயக்கினாயே மெல்ல 
மல்லிகையே மன்னவன் நான் முகமலர்ந்து நின்றேன் -உன் 

படர் கூந்தல் மீதே நான் படகாக உலவ 
பகலென்ன இரவென்ன பொழுதொன்றும்  போதா
மோகத்தில் மலருன்னை மெலிதாக வருட 
மேகம் போல் கடந்தாயே மெதுவாக என்னை 

கயல்விழியே உன் கருவிழியால் எனைக் கயிறாகத் திரித்தாய் 
கட்டுடலும் கலங்கிடவே கலகங்கள் செய்தாய் -உன் 
கொடியிடையில் தடுமாறி தரை தட்டி நின்றேன் -உன் 
கொழுசாலே அசை போட்டு திசை காட்டி கலைத்தாய் 

திசைமாறி தடம் மாறி உன் முகம் நோக்கி வந்தேன் 
தேனிதழால்  தீண்டியெனை தேன் பருக வைத்தாய் 
நிலவே உன் முகமீது தலை சாய்த்து உறங்க 
நெடுங்காலம்  போதாதென நொந்தே நான் சாய்ந்தேன் !!!!!!!


சனி, 20 அக்டோபர், 2012

மார்வன் அத்தப்பத்து!!!!!

 சிலர் அருகிலிருக்கும் போது அவர்களின் அருமை புரியாது. அவர்கள் இல்லாதபோது அல்லது நம்மிலிருந்து அன்னியமாகும் போது தான் அவர்களின் அருமை , பலம் புரியும். அவர்களது தனித்துவமும் அப்போதே புரியத்தொடங்கும். 

இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் சனத்தை தலை மேல் தூக்கி கொண்டாடிக்கொண்டிருந்தபோது சத்தமே இல்லாமல் சாதித்து பொறுமையுடனும் அனுபவ முதிர்ச்சியுடனும் பக்குவப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையின் தூணாக ஆணிவேராக தாங்கியவர் தான் மார்வன் அத்தப்பத்து.  அவர் ஆடியகாலத்தில் அவரை மந்தமான ஆட்டக்காரர் என்றும், சிக்சர் அடிக்கத்தேரியாதவர் என்றும் மிகுந்த பொறுமையுடன் விளயாடியதாலும் பலர் அவரை ரசித்துப்ப் பார்த்ததில்லை.
ஆனால் இலங்கையின் அத்தனை முக்கிய வெற்றிகளிலும் முக்கிய அல்லது முளுப்பங்கையும்வழங்கியவர் இந்த அத்தப்பத்துவே.
இப்போதும் அவர் விளையாடிய காலத்துப் போட்டிகளை பார்த்தால் ஸ்கோர் பாட் சமரியில் இவரின் பெயர் நிச்சயம் இல்லாமல் இருக்காது. தான் விளையாடிய அநேகமான போட்டிகளில் கணிசமான ஓட்ட எண்ணிக்கையை எடுக்கத்தவறாத ஒரே இலங்கை மட்டையாளர் அத்தப்பத்துவே. 

கிரிக்கட் வரலாற்றில் தோன்றிய மிக குறைந்த "timing, perfect ,most technically correct batsmen  களில் இவரும் ஒருவர் என இனம்கானப்படுகிறார். இவர் சிக்சர் அடித்து நான் பார்த்தது ஒரு சில தடவையே எனினும் இவரது பவுண்டரிகள் அடிக்கும் காட்சிகள் இன்றும் மனதில் அப்படியே நிழலாடுகின்றன.  மின்னலென பறந்து வருகின்ற புயல் வேகப் பந்துகளையும் சளைக்காமல் பதறாமல் முழங்காலை முன்நோக்கி நகர்த்தி அடிக்கும் டிரைவ் இருக்கே ,,, அதை காணக் கண் கோடி தேவை. அவ்வளவு smartness, stylish ஷோட்கள். அடித்த மாத்திரத்திலேயே புயல் வேகத்துடன் பவுண்டரி எல்லையை தாண்டும் அழகு, எவ்வித பவுன்சர்களும் இன்றி தரையுடனே நிலத்தை தடவிக்கொன்று சீரிச்ச்செல்லும் வேகம் என அப்படியான டிரைவுகளை வேறு எந்த துடுப்பாட்டவீரர்களிடமும் கண்டதேயில்லை.  அவர் drive  அடிக்கும் போது அவருடைய அந்த பாடிலாங்குவேஜ்  தனித்துவமானது.




இலங்கையணி ஆடிய போட்டிகள் அநேகமானவற்றில் அண்ணன் ஜெயசூரிய வந்த வேகத்திலே சிலிப் கட்சிலோ அல்லது அருகிலுள்ள பீல்டர்களிடமோ பந்தை கொடுத்துவிட்டு கர்ணன் போல balcony சென்றுவிடுவார். பின்னே வருபவர்களும் வரிசையாக நடந்துகொண்டிருப்பார். ஒரு பக்கம் விக்கட் விழுந்து கொண்டிருக்க பொறுமையுடன் எதிரிலே மலைபோல நிலைத்து பந்துகளை பொறுமையுடன் எண்ணிக்கொண்டிருக்கும் அத்தப்பத்து பவுண்டரிகளிட்கு விரட்டவேண்டிய சரியான பந்துக்களை கணித்து தக்க நேரங்களில் அது பவர்பிளே இல்லாத போதும் விளாசிவிடுவார். பின்னர் மீண்டும் சிங்கிள்ஸ் டபிள்ஸ்  நோ-ரன்  பின் மீண்டும் பவுண்டரிகள் என சீராக ஓட்ட எண்ணிக்கையை தூக்கிவிடுவார். இனின்க்ஸ் முடிவில் இலங்கை அணி எப்படியும் 220/240 கு மேல் எடுத்துவிடும். 
அப்போதெல்லாம் எதிரணிக்கு அது ஒரு பெரிய இலக்கு. முரளி, சமிந்த , சனத் ஆகியோரை எதிர்கொள்வதே ஒரு பெரும் சவால். அப்படி எதிர்கொண்டாலும் பந்துக்களை பவுண்டரிகளிட்கு அனுப்ப முடியாது. 
அப்போதெலாம் கலத்தடுப்பென்றாலே இலங்கை தான் .(தென்னாபிரிக்காவை  விடுங்கள்).  இப்படிதான் தூண் போல நின்று காத்தவர் . இலங்கையணி துரத்தியாடுகிறது என்றாலும் ஓட்டவிகிததுக்கேட்ப விளையாடுவார்.  

இவரது பெரிய இனின்க்ச்களில் பவுண்டரிகளிட்கு பஞ்சம்  இருக்காது. சத்தமே இல்லாமல் பத்து பதினைந்து பவுண்டரிகளை இனின்க்ஸ் முழுக்க அடித்துவிடுவார். எப்போது அடித்தார் என்றே பலருக்கும் தெரியாது.

இவர் விளையாடிய காலத்தில் எதோ ஒரு கட்டுரை படித்த நினைவு. அப்போது பொண்டிங்கிடம்(?) நீங்கள் சனத்தை எப்படி எதிர்கொள்ளபோகிரீர்கள் என்று கேட்பார்கள், அதற்கு அவர் " நாங்கள் விரைவாக அத்தப்பத்துவை வெளியேற்றிவிட்டால் இனின்க்ஸ் முழுக்க ஆதிக்கம் செலுத்தமுடியும்  " என்று கூறியது நினைவிருக்கிறது . 

இவரது 2003 உலககிண்ண தென்னாபிரிக்காவிட்கேதிரான ஆட்டம், முக்கியமான ஒரு சுப்பர் சிக்ஸில் சிம்பாப்வே உடனான ஆட்டம் என பல்வேறு மிக மிக சிறந்த இனிக்ச்கள் உள்ளன. அதுவும் தென்னாபிரிக்காவிட்கேதிர ாக 18 பவுண்டரிகள்!! ஒவ்வொன்றும் அழகான நேர்த்தியான ஷோட்கள்.

இவர் இருந்த போது மஹேல, சங்கா எனபலரும் இருந்தாலும் அப்போதெல்லாம் இவர்கள் பெரிதாக பிரகாசித்ததாக நினைவில்லை. இலங்கையநியுன் ஓட்ட இயந்திரமாக அத்தபத்துவே இருந்தார். 

இலங்கையணி வீரர்கள் 30  சராசரி வைத்திருப்பது இப்போது கூட அபூரவமாக இருக்கின்ற போது இவர் அப்போதே அண்ணளவாக 38 சராசரி வைத்திருந்தார்.  இவர் அதிரடியாக ஆடி தள்ளிய போட்டிகளும் உள்ளன. 



டெஸ்டில் தான் இவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை அறிந்துகொள்ளலாம். 5 இரட்டைச்சதன்களை விளாசியுள்ளார். இவ்வளத்திட்கும் இவர் தனது முதலாவது அரைச்சதத்தை 17 வது  innigs பெற்றார். முதல் 6 இனின்க்ச்களில் 5 டக் அவுட்.  இருந்தும் சராசரி அண்ணளவாக 40 .   இவர் களத்தில் இருந்துவிட்டால் அந்த எமனே வந்தாலும் ஒன்றும் பண்ணமுடியாது. எதிரணியை வேருப்பெற்றிவிடுவார். எனினும் டிராவிட் போல லட்சுமணன் போல பிட்சில் பாய் விரித்து படுத்து விடமாட்டார். அடிக்கடி தனது ஸ்டைலிஷான டிரைவ் ஷோட்கள் மூலம் பவுண்டரிகளையும் விலாசிகொண்டிருப்பதால் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

சங்ககார என பலபேர் இப்போது drive shotsஅடித்தாலும் அத்தப்பத்து அடிக்கும் விதமே தனித்துவமானது. அவர் டிரைவ்  நிச்சயம் பவுண்டரிதான். ஒரு இனின்க்சில் நீண்ட நேரம்  களத்தில் உள்ளாரெனில் வெற்றி நிச்சயம் இலங்கைக்கு என உறுதியாக கூறிவிடலாம். சிலவேளைகளில் ஏனையவீரர்கள் சொதப்பி தோற்றதுண்டு.


இப்படிப்பட்டதொரு வீரரை இனி காணமுடியாது என்பது தான் உண்மை. அப்போதெல்லாம் சலிப்பெற்றிய இவரது இனின்க்ஸ்  இப்போது யூடியூப்பில் பார்க்கும் போது தான் எவ்வளவு அருமையானவை என புரிகின்றன .   இப்போது ஆரம்பத்தில் சொன்ன வசனங்கள் நினைவிற்கு வருகின்றன.  
"
சிலர் அருகிலிருக்கும் போது அவர்களின் அருமை புரியாது. அவர்கள் இல்லாதபோது அல்லது நம்மிலிருந்து அன்னியமாகும் போது தான் அவர்களின் அருமை பலம் புரியும். அவர்களது தனித்துவமும் அப்போதே புரியத்தொடங்கும். ""

திங்கள், 9 ஜூலை, 2012

கற்பனை காதலி










வெள்ளிநிலா நிறத்தினோடும்
வெளிப்படையாம் உளத்திநோடும்
கூர்நுனி மூக்கிநோடும்
கார்மேகக் கூந்தலோடும்
மல்லிகைப்பூ வாசத்தோடும்
மெலிந்த இடை உடலினோடும்
மலர்ந்து விடும் முகத்தினோடும்
மலர்மென் தேகத்தோடும்
குயில் போன்ற குரலினோடும்
கலங்கும் சிறு நெஞ்சினொடும்
குறும்பு  மிகு பேச்சினோடும்
கபடமற்ற எண்ணத்தோடும்
அன்னைமரி சாயலோடும்
அன்பெனும் ஊற்றினோடும்
கோபமற உளத்தினோடும்
கோபுரம்போல் பார்வையோடும் 
உலகறியும் ஆற்றலோடும்
உடைந்துவிடா உறுதியோடும் 
தேவதை தான்
தேவி எந்தன்
இப்படிப் பெண் தோன்ற மாட்டாள்
தோன்றினாலும் -எனை
விரும்ப மாட்டாள்!!!!!!!






காற்றாக ......


காற்றோடு போகிறேன் 
நிலைத்துவிட விரும்பவில்லை -காலத்தில்
எனைக்  கடந்தவர்கள் பலர்
நான் கடந்தவரும்  பலர்
காற்றோடு போனாலும் 
காலத்தால் வருவேன்
நான்  நேசிபோர்க்காக!!! 

ஞாயிறு, 8 ஜூலை, 2012

யாழ்ப்பாணமும் பத்திரிக்கை கலாச்சாரமும்!!!


யாழ்ப்பாணத்தில் பத்திரிக்கை கலாசாரம் என்பது ஏனைய இடங்களை விட சற்று தூக்கலாக தான் இருக்கும். காரணம் அங்கு நிலவிய போர்ச்சூழல் தான். என்னதான் யாழில் இருந்து  பல பத்திரிகைகள் வெளிவந்தாலும் உதயன் பத்திரிகைக்கு இருந்த மவுசே தனிதான். அநேகமான  யாழ்பானத்தவர் களின்    விடியல்கள்   காலை தேனீருடன் சுடச் சுட உதயன் பத்திரிகையை புரட்டி படிப்பதுடனேயே ஆரம்பிக்கும். யாழ்ப்பாணத்து பலசரக்கு கடைகள் 
விடிகாலையிலேயே  பரபரப்பாகிவிடும் , பத்திரிக்கை வாங்க வரும் கும்பல்களுடன். 


எங்கள் வீட்டிற்கு ஒருவர் 6 மணியளவில் உதயன் பத்திரிகையை gate மேலாக வீசி விட்டுச்செல்வார். அதற்கு முன்னமே நான் எழுந்து எப்படா அவன் வந்து வீசிவிட்டு போவான் எண்டு பார்த்துக்கொண்டிருப்பேன். யார் முதலில் பத்திரிகையை எடுப்பது என்று ஒரு பெரும் போட்டியே இடம்பெறும். காரணம் முதலில் எடுப்பவர் புரட்டி புரட்டி வாசித்து முடிக்கும் வரை மற்றவர் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் நானாக இருந்தால் வேண்டுமென்றே  படித்த  செய்தியையே திரும்பத் திரும்ப படிப்பேன். மற்றவர்களை வெறுப்பேற்ற! 



யாழ் பத்திரிகைகள் முழுக்க முழுக்க போர்ச் செய்திகள் பேச்சு வார்த்தை செய்திகளையே தாங்கி வரும். மிச்சம் தான் கண்ணீர் அஞ்சலிகளும், மரண அறிவித்தல்களும்.
எல்லோரும் போர்ச்செய்திகலையே விரும்பி விரும்பி படிப்பார். அதுவும் மிகவும் பரபரப்பாக மூர்க்கமாக போர் இடம் பெற்ற கால பகுதிகள். பத்திரிகைகாரர்கள் புகுந்து விளயாடிவிடுவர்.  உதாரணமாக   ஒரு சாதாரண துப்பாக்கிபிரயோகம் இடம் பெற்றால் கூட அதை "அதிர்கிறது மானிப்பாய்!!!!!! அதிகாலையில் அதிரடித்தாக்குதல்!!! இச்செய்தி அச்சுக்குப் போகும் வரை சேத விபரங்கள் வெளியாகவில்லை" எண்டு  நகரத்தையே அல்லோலகல்லோலப் படுத்திவிடுவார்கள். அதையே இன்னும் சில பெருசுகள்  மானிப்பாயில  புகுந்து பிடிச்சிட்டாங்களாம்,சரியான இழப்பாம் என்றெல்லாம் கதைய கட்டிவிட்டுடுங்கள்!  மறுநாள் அப்படியே அதை அமுக்கி விட்டு வேறு பரபரப்பு செய்தியை போடுவாங்கள்!
எங்கெங்க நேற்று மோதல் இடம் பெற்றது, எவர் தரப்பில் என்னென இழப்பு, யார் யார் எதை எதையெல்லாம் கைப்பற்றினார்கள், இதை பற்றி அவங்கட தரப்பு என்ன சொல்லுது, இவங்கட தரப்பு என்ன சொல்லுது என்றெல்லாம்  எழுதி பத்து பக்கத்தையும் நிறைசிட்டு, எஞ்சியவற்றில் கண்ணீர் அஞ்சலி, மரண அறிவித்தல், பாராட்டி வாழ்த்துகிறோம் எண்டு பத்திரிகையை விற்று போடுவார்கள். போதாக்குறைக்கு ராணுவ நடவடிக்கைகள் பற்றி இவர்களின் ஆக்கங்கள் வேறு இதயெல்லாம்  நம்பினோமோ இல்லையோ சுடச் சுட சூட்டோடு சூட்டாக வாசித்து விட்டு, பள்ளிகளில் இதை பற்றி அலசி ஆராய்ந்து விடுவோம்!!

பொதுவாக மாணவர்களின் பத்திரிக்கை தேடல் என்பது ஹர்த்தால்  பற்றியே  இருக்கும். யாழ்ப்பாணத்தில் அடிக்கடி ஹர்த்தால்களை இருதரப்பினரும் அனுசரித்து மாணவகளை சிறப்பித்தனர். பொதுவாக ஹர்த்தால் நடக்க போகுது எண்டு முதலிலேயே ஒரு ஊகம் ஒன்று இருக்கும். இருந்தாலும் அதை உறுதிபடுத்திக்கொல்வதட்காக  அதிகாலையில்  முழுசி முழுசி பத்திரிகைகளை புரட்டுவதுண்டு. சில நேரங்களில் இறுதி நேரத்தில் ஹர்த்தால் ரத்தாகி விடும். அச்சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளை நொந்து கொள்வோம். எந்த தரப்பு ஹர்த்தாலை நடாத்தினாலும் வஞ்சகம் இல்லாமல் நாம் ஹர்த்தால்களை வரவேற்ற்பதுண்டு. பொதுவாக பள்ளி விடுமுறைகளை  விட  ஹர்த்தால்களே எமக்கு கை  கொடுத்ததுண்டு. அதுவும் வீட்டு வேலைகள், ஒப்படைகள் முடியாத நேரங்களில் ஹர்த்தால்கள் வந்து விட்டால் சொல்லவும் வேண்டுமா???/ பிறகென்ன நண்பர்களுடன் துடுப்பு மட்டையுடன்  அண்ணன் ரோமேசானந்தாவின் வீட்டிற்கு  சென்று மறுநாள் விடியும் வரை விடிய விடிய மட்டையடிதான்!(இப்படித் தான் நாம் நாசமாக போனோம்)


இப்போதெல்லாம் போர் முடிந்து அச்செய்திகளே  இல்லாமல் போன பின்பு இப்பத்திரிகைகள் படும் பாடு தான் கவலையாக உள்ளது,  "பஸ் பறந்தது!! பயணிகள் படுகாயம்" "வெங்காய விலை இரவோடிரவாக அதிகரிப்பு" என்றெல்லாம் செய்திகளை எழுதி  காலத்தை ஓட்டுகிறார்கள்!!!!!!!!!!!

வெள்ளி, 6 ஜூலை, 2012

பிறந்த நாள் வாழ்த்துக்கள் டோனி !!!


வியாழன், 5 ஜூலை, 2012

நட்பிலும் வலிமையான காதல்






இந்த உலகையே அன்பு என்பதே அடக்கி ஆண்டு வருகிறது. அன்பு என்றவுடன் நினைவிற்கு வருவது நட்பு, காதல் என்ற அந்த இரண்டு சொற்களே! உண்மையிலேயே சிறந்தது காதலே!!!! நட்பு என்பது தற்காலிகமானது, தத்தமது தேவைகளினாலேயே ஒருவர் ஒருவரிற்கு நண்பனாக உள்ளனர்!!!! காதல் அப்படியானது அல்ல!!!! அது நிரந்தரமானது! ஆயுள் வரைக்குமானது!!!!! அன்பு சார்ந்தது.  உண்மையானது!


உங்கள் வாழ்கையில் எத்தனை நண்பர்களை சந்தித்திருப்பீர்கள்? நீங்கள் சந்தித்த அத்தனை நண்பர்களும் இன்று வரை உங்களிற்கு நண்பர்களாக உள்ளனரா? நிச்சயமாக இல்லை!!!  தரம் ஒன்றில்  உங்களிற்கு உயிர் நண்பனாக் இருந்தவர் தரம் நான்கில் வேறு ஒருவரின் உயிர் தோழனாக இருப்பார். உங்களிற்கு வேறு ஒருவர் உயிர்  தோழனாக க் இருப்பார்.
நீங்கள் டிவிசன் மாற மாற உங்கள் வகுப்பில் உள்ளவரே உங்கள் உயிர்  தோழனாக  இருப்பார். அதாவது உங்களிற்கு தேவை படுகின்ற, நீங்கள் அதிகமாக பழகும் ஒருவரே உங்களின் உயிர் தோழனாக இருப்பார். இது காலம் மாற மாற மாறிக்கொண்டு இருக்கும்!  நீங்கள் உயர் தரம் படிக்கும் போது ஒவொருவரும் ஒவ்வொரு துறையை தெரிவு செய்வர். உங்கள் நண்பர் வேறு ஒரு துறையை தெரிவு செய்வர். இப்போது ஒவ்வொருவரும் தத்தமது துறையில் உள்ளவர்களுடனே அதிகம் பழக வேண்டும்,  அவரே உங்களிற்கு அதிகம் தேவை படுவார்!! எனவே பழைய நண்பருடன் பழகுவது படிப்டையாக் குறைந்து அவர் உங்களிற்கு சாதாரண நண்பராகி விடுவார். அடுத்த மூன்று  வருடத்திற்கு  உங்களிற்கு உங்கள் வகுப்பில் உள்ள/ உங்கள் துறையில் உள்ளவரே உங்களிற்கு பெஸ்ட் பிரண்ட்.

அதுவும் தற்காலிகமானது! பாடசாலை வாழ்க்கை முடிந்தவுடன் ஒவொருவரும்  தத்தமது வாழ்கையை தீர்மானித்து கொள்ள வேண்டிய நேரம்! சிலர் பல்கலை செல்வர், சிலர் வெளிநாடு சிலர் வேறு வேறு துறையை தெரிவு செய்வர். பல்கலை சென்றவர்களிட்கு பல்கலையில் உள்ளவர்களே நன்ப்ரகளாக இருப்பார், உயர் கல்வி சென்றவர்கள், வெளிநாடு சென்றவர்களுக்கும் இப்படியே!! இதுவே உண்மையான நட்பு என்று நினைப்பார்! இல்லை!! அதுவும் மிஞ்சி மிஞ்சி போனால் நான்கு வருடங்களே!!!! get-together என்று கண்ணீருடன் விடை பெறுவார்!  இந்த கண்ணீர் சில நாட்கள் மட்டுமே! பின்னர்  வேலைக்கு செல்வீர்கள் அங்கு உள்ளவர்களுடனே அதிக நேரத்தை செலவு செய்வீர்கள், பழகுவீர்கள். பழைய நண்பர்களுடன் பழகுவதோ, அவர்களை காண்பதோ  அரிதாகி விடும். இப்போது  உங்களிற்கு புதிய நட்பு! இப்படியே காலம் மாற மாற நட்பும் மாறும்.  நட்பு  தற்காலிகமானது!

ஒரு சிறு உதாராணம், எனக்கு பாடசாலை காலத்தில் ஒரு நண்பன் இருந்தான். ஒரு சிறு பிரச்சினை பெரிதாகி பெரும் பிரச்சினையாகி விட்டது. அதன் பின்னர் கதைப்பதே இல்லை. பாடசாலை முடித்து உயர்  கல்விக்காக தலைநகர் வந்து தனியாக  இருந்தேன். நண்பரும் அப்படி தான். திரிவதற்கு வேறு எவரும் இல்லை. ஒரு நாள் அவனிடம் இருந்து 
call  வந்தது. நம்பவே முடியவில்லை!  அதன் பின்னர் உயர் தர பரீட்சை முடிவு வரும் வரை ஒன்றாக திரிந்தோம்!  பின் அவன் பல்கலை சென்று விட்டான், நானும் வேறு துறைக்கு சென்று விட்டேன்!!!! அதன் பின்னர் அவனை காண்பதே அரிதாகி விட்டது!!! அவனிற்கு புது நண்பர்கள்!! எனக்கும் புது நண்பர்கள்!  எமக்கு நட்பு தேவைபட வில்லை!!! ஆக நட்பு என்பது தற்காலிகமானது! தேவை, சூழல் சார்ந்து வருவது. அது தற்காலிக ஆறுதல் போன்றது!

                                               பெண்- பெண் நட்பு 

ஆண்களின் நட்பை விடுங்கள் அது வெளிப்படையானது. பெண்கள்இட்கிடையான் நட்பு அப்படியல்ல! முழுக்க முழுக்க சுயநலம், போட்டி , பொறாமை நிறைந்தது . என்னதான் நன்றாக பழகினாலும் தம்மையே முன்னிலை படுத்துவர்!  தமிடையே நன்றாக கதைத்து விட்டு பிறரிடம் தம் நண்பியை பற்றியே பிழையாக பேசுவர்.

                                                  போலியானது ஆண் -பெண் நட்பு 

எனக்கு social, cultural என்பதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. எனக்கு தெரிந்தது எல்லாம் யதார்த்தம் மட்டுமே. என்னை பொறுத்த வரை ஆண் பெண் நட்பு ஆபத்தானது.
ஆண்கள்  பெண்களிற்கு எதையும்  வழிந்து வழிந்து செய்வர்! எல்லாம் ஒரு உள் நோக்கத்துடனே! அவர்களிற்கு உண்மையில் அன்போ அக்கறையோ கிடையாது. 
எனக்கு பல நண்பர்கள் உள்ளனர் அவர்களிற்கு பல பெண் நண்பர்கள் உள்ளனர். அவர்களிற்காக பல உதவிகள் செய்வர். அந்த பெண்களும் எனக்கு இப்படி ஒரு நண்பனா என பெருமைப் ப டுவர். இதனால் அந்த பெண்ணிற்கும் காதலநிட்கும் பிரைச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். ஆண் நண்பர்களோ ஆபத்தானவர்கள். அவன் எம்மிடம் கதைக்கும் போது அந்த பெண்ணை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசுவான். அவனின் நோக்கம் என்ன என்பது சொல்ல வேண்டியது இல்லை!  இப்போது எங்களிற்கு அந்த பெண்ணை பற்றி பெரிய அபிபிராயம் எல்லாம் இல்லை! அவளின் பெயர் ஆண்களிடத்தில் நன்றாக இல்லை!! ஆகவே ஆண் பெண் நட்பு ஆபத்தானது. அது திரைப்படங்களில் மாத்திரமே சாத்தியமானது!

காதலோ நிரந்தரமானது!!! உண்மையானது!! ஆழமானது!! என்ன தான் சண்டை சச்சரவுகள் வந்தாலும் உண்மையான அன்பு, அக்கறை  காதலிட்கே உள்ளது! பாடசாலை காலத்திலோ, உயர் கல்வியிலோ பின்னரோ ஆயுள் வரைக்கும் நிரந்தரமானது காதல் மட்டுமே(ஒரு சில கழற்றி விடுகின்ற ஜோடிகளை தவிர). நட்பு என்பது உங்களுடன் மிக சிறிய  தூரம்   வரை பயணித்து விட்டு தமக்குரிய பாதை வந்தவுடன் அவ்வழியே பிரிந்து சென்று விடும்!!! காதலோ உங்கள் பாதை முழுதும் எந்த இடரான பாதையாயினும் உங்களுடனே ஆயுள் வரைக்கும் சமாந்தரமாக பயணிக்கும்! ஆகவே நட்புக்காக காதலை இழக்காதீர்கள்!!!